கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் தொழிலாளி. இவர் வேலைக்கு பேருந்தில் செல்லும் போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்நிலையில் மனோஜ்க்கு கஞ்சா பழக்கம் இருந்தது. அவர் அந்த மாணவிக்கு கஞ்சா பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனோஜ் அந்த மாணவியை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மனோஜ் அந்த மாணவியை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மனோஜை கைது செய்து அந்த மாணவியை மீட்டனர். மேலும் விசாரணையில் மனோஜ் அந்த மாணவிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனோஜ்க்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.