பிரதமர் மோடியின் தாயார் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் காந்தி நகரில் இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு நாட்டிலுள்ள பல அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என்று அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தாயை இழந்த துயரம் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கதில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்காக அகமதாபாத் செல்கிறார். மதியம் 12 மணி விமானத்தில் புறப்பட உள்ள முதலமைச்சருடன், நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவும் உடன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.