கோவை: நீலகிரி மாவட்டம், ஊட்டி பாலடாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 38) விவசாயி. இவர் நேற்று மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். மிகவும் களைப்பாக இருந்ததால் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கல்லாரில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க அறை ஒன்றை பதிவு செய்தார். அப்போது விடுதியின் மானேஜர் ராஜசுந்தர் (வயது 31) விடுதி உரிமையாளரர் ராஜ்குமாரை சந்தோஷ்க்கு அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து விடுதி ஒனர் ராஜ்குமார் சந்தோசிடம் விடுதியில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார் .அப்போது சந்தோஷ் தன்னிடம் பணம் இல்லை. ஏ.டி.எம். சென்று பணம் எடுத்து விட்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அந்த விடுதிக்கு சென்ற போலீசார் சோதனை செய்தனர் .அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது .இதையடுத்து உரிமையாளரானவெள்ளியங்கிரி நகரைச் சேர்ந்த ராஜ்குமார் |லாட்ஜ் மானேஜர் ராஜசந்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விடுதியில் இருந்த பெண்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.