கோவை சவுரிபாளையம் கல்லறை தோட்டம் அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பீளமேடு போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 கஞ்சா செடிகள் வளர்த்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கஞ்சா செடிகள் பயிரிட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அது யார் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கு கஞ்சா செடிகள் பயிரிட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலி இடங்களில் வளர்த்த கஞ்சா செடிகள் பறிமுதல்-மர்ம நபருக்கு வலை ..!
