கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியில் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ஒரு சந்தன மரத்தை நேற்று இரவு யாரோ வெட்டி கடத்தி சென்று விட்டனர். இது குறித்துஉதவி பொறியாளர் பசும்பொன் ( வயது 36) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்..நேற்று முன்தினம் ரேஸ் கோர்சில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில் 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.