கடலூர் : பாஜக மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது . பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தச் செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான கூட்டமாக இருந்தாலும், நாள்தோறும் பாஜக அரசியல் அரங்கில் பரபரப்புகளைக் கிளப்பி வரும் சூழலில் நடைபெறும் இந்தக் கூட்டம் கவனிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உட்பட சுமார் 450க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக் காலம் இம்மாதம் முடிவடையும் நிலையில். 2024 மக்களவைத் தேர்தலின்போது கட்சிக்கு அவர் தலைமை வகிக்கும் வகையில் அவரது பதவிக் காலம் இக்கூட்டத்தில் நீட்டிக்கப்பட்டது. பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா 2024 ஜுன் வரை நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 9 மாநில சட்டமன்ற தேர்தல்கள், மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்தச் செயற்குழுவில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ராமர் பாலத்துக்கு பாதிப்பு இல்லாமல் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாஜக செயற்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும், பூத் கமிட்டியை வலுப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ல் நடக்க உள்ளது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது
பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதேநேரம், ஜிகே வாசனின் தமாகா இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. அதிமுகவும் நேரடியாக களத்தில் இறங்க நினைக்கிறது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள், தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து இன்று நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.
இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக முடிவெடுக்குமா என்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கபட்டது . ஏனென்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கியது. இதனால் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.