கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி செல்வதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கோவை அவிநாசி ரோட்டில் 4 பிரிவுகளாக நின்று அதிவேகமாக பைக்கில் செல்பவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 80 இளைஞர்கள் அதிவேகமாக சென்றதாக பிடிபட்டனர்.இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.இவர்கள். மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.தொடர்ந்து நகர் முழுவதும் இந்த சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.