ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக தரப்பில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக தரப்பில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 105 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக திமுக அமைத்த தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, நாசர், சக்கரபாணி உள்பட 31 பேர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.