இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை என்பது அடிப்படையான ஒன்று. தேர்தலின் போது வாக்களிப்பதற்கு 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தற்போது கோஸ்ட் இமேஜ் அனுப்பப்படும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டை ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது.
அதன் பிறகு இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள் இடம்பெறும். இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் மிகச் சிறிய எழுத்து இடம் பெற்றுள்ளது. இதை பூத கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க முடியும். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்த தேர்தலை முன்னிட்டு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.