மாயமான வாலிபர் வாலாங்குளத்தில் பிணமாக மீட்பு..!

கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் சலீம் .இவரது மகன் முகமது ஹனீபா(வயது 29) காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.இவர் கடந்த 6 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு இவர் அடிமையாகி இருந்தார்.இதை இவரது தந்தை கண்டித்தார்.இதனால் முகமது ஹனீபா வீட்டிலிருந்து திடீரென்று மாயமானார். இந்த நிலையில் நேற்று வாலாங் குளத்தில் இவர் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் சலீம் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.