கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம்,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் .இவரது மகன் மனோஜ் குமார் ( வயது 21) தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம்ஆண்டு படித்து வருகிறார்.இவர் நேற்று அவரது பைக்கில் நண்பருடன் ராம்நகர் வி கே.கே.மேனன் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.நேரு வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் இவர்களை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். மறுக்கவே அவரது இருசக்கர வாகனத்தை பறித்தனர். அப்போது மனோஜ் குமார் அவர்களில் ஒரு கொள்ளையனை மடக்கி பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார் . மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர் .போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர் கோவை ரத்தினபுரி 7-வது வீதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பது தெரிய வந்தது.இவனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ரத்தினபுரி வைஷ்ணவ் (வயது 24) சித்தாபுதூர், ஹரிபுரம், சிங்காரன் (வயது 21)ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் .கத்தியும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் பறிப்பு – 3 பேர் கைது..!
