விழுப்புரம் அருகே ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்.
2 இடங்களில் செயல்பட்ட அன்புஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைப்பு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜுபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதி இன்றி ஆசிரமம் நடைபெற்று வந்ததும், ஆசிரமம் மத்தியில் பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்துவதோடு, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், ஆசிரமத்தில் இருந்த 16 பேர் மாயமாயகியிருப்பதும் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்களும் ஆனது.
இதையடுத்து ஆசிரமத்தில் தங்கி இருந்த 141 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் அன்புஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக கிடார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி மனைவி மரியா ஜூபின், கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பச்சேரி தெருவை சேர்ந்த ஆசிரம மேலாளரான பிஜூமோகன், ஆசிரம பணியாளர்களான விழுப்புரம் ஆயிரம் பாளையத்தை சேர்ந்த பூபாலன், தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுக்கா நாராயணபுரத்தை சேர்ந்த முத்துமாரி, விக்கிரவாண்டி அருகே விநாயகபுரத்தை சேர்ந்த கோபிநாத், நரசிங்கனூரை சேர்ந்த அய்யப்பன், கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தாஸ், தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ் ஆகிய எட்டு பேர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர் .
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஆசிரம நிர்வாகியான ஜூபின்பேபி, தன்னை குரங்குகள் கடித்ததால் காயம் இருந்த கூறி முன்பாக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரை உடனடியாக கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து போலீசரின் அழைப்பு ஏற்ற விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிமன்ற நீதிபதி அகிலா அதிகாலை அரை மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் பின்னர் ஜூபின்பேபியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அகிலா உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து ஜீப்பின் பேபியை கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்னும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளதால் அவர் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பாக பேசப்பட்டு வரும் குண்டலம் புலியூர் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் வானூர் தாலுக்கா புளிச்சபள்ளம் மற்றும் கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி உள்ளிட்ட இடங்களில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தின் செயல்பட்டதும் அங்கு வைத்து பெண்களுக்கு ஆசிரமம் நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தும் அதிகாரியின் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் வருவாய் துறையினர் புளிச்சபள்ளம் மற்றும் சின்ன முதலியார் சாவடியில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர் அங்கு இருந்த 12 பெண்கள் உட்பட 25 பேரை அதிகாரிகள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர் . இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் வானூர் தாசில்தார் கோவர்த்தனன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் கோட்டகுப்பம் போலீசார் பாதுகாப்புடன் ஆசிரம கதவை இழுத்து மூடி சீல் வைத்தனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.