கோவை அருகே உள்ள கணபதி மாநகர சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் கார்த்திக் ( வயது 28) கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த 3பேர் இவரிடம் இருந்து 1550 ரூபாயை நைசாக திருடினார்கள். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் கார்த்தி கையும் களவுமாக பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார் .போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வடவள்ளி நியூ தில்லை நகரை சேர்ந்த ராபர்ட் (வயது 17) வீரகேரளம் அண்ணாநகர் வீரன் (வயது 17 )வடவள்ளி சின்மயா நகரை சேர்ந்த அர்ஜுன் ( வயது 18) என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளது.