கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் 50 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் இலவச திருமணம் நடத்தும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான இலவசமாக வழங்கப்படும் உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம்,பீரோ,மெத்தை,கட்டில், தலையணை, கை கடிகாரம், மிக்ஸி, பூஜைப் பொருட்கள், பாய், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் செலவினை அறநிலையத் துறையே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.