கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பெறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.அனைத்து காவலர்களும் அதிகாரிகளும் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும்என்று உத்தரவு பிறப்பித்தார்.காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கபட்டனர். புகார் கொடுக்க வரும் பொது மக்களை கனிவுடன் நடத்த வேண்டும் . அவர்களது குறைகளுக்கு 10 நாட்களில் தீர்வு காண வேண்டும். என்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கு முன்மாதிரியாக போலீஸ் கமிஷனர் தினமும் காலையில் “ரவுண்ட்ஸ்” முடித்துவிட்டு காலை 9 – 30 மணிக்கு மேல் 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து விடுகிறார்.மதியம் 2 மணி வரை பொதுமக்களிடம் குறைகள் கேட்கிறார். கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் அனைத்து காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ளன.அலுவலகத்தில் இருந்தே அனைத்து காவல் நிலையங்களின் செயல்பாடுகள், அங்கு வரும் பொதுமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? இருக்கைகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன. என்பதை அலுவலகத்தில் இருந்தே கண்டறிகிறார்.புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மரியாதை குறைவாக நடத்தப்பட்டால் கம்ப்யூட்டர் மூலம் பார்த்து எச்சரிக்கை விடுகிறார். இதனால் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.