இந்தியா வருகிறார் ஜெர்மனி அதிபர். பிரதமர் மோடியுடன் சந்திப்பு..
ஜெர்மனி அதிபர் இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக பிப்ரவரி 25ஆம் தேதி வர உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் என்பவர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24 தேதி சனிக்கிழமை இந்தியா வருகிறார். அன்றைய தினம் அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார் என்றும் இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம் இருநாட்டு உறவு உட்பட பல்வேறு உவகாரங்கள் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பிப்ரவரி 26 ஆம் தேதி ஜெர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ் பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றும் இந்திய ஜெர்மனி தொழில் துறையினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஜெர்மனி அதிபரின் இந்திய வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.