உக்ரைன் மீதான ரஷ்யா போர் இன்றுடன் ஒரு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. குறிப்பாக இந்த போர் தொடங்கப்பட்டு 365 நாட்கள் கடந்துவிட்டன.
ஆனால் போர் முடிவதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் தற்போது வரை தென்படவில்லை. மாறாக பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் திடீர் பயணமாக உக்ரைன் சென்றதும் அதிபர் அவரை சந்தித்து பேசி கூடுதலாக 4000 கோடிக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்ததும், போரை மேலும் தீவிர படுத்த செயலாக அமைந்து இருக்கிறது.
இப்படியே இந்த போர் அமைந்திருந்தால் மேலும் ஒரு ஆண்டுகள் நீடிக்கப்படும் என்று ஒரு அச்சமும் மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது. இதையொட்டி ஐ.நாவில் தற்போது தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை இந்தியா பெரும் அளவில் புறக்கணித்தும் வரும் நிலையில் இந்தியாவின் ஆதரவு கேட்டு உக்கரை தற்பொழுது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வரும் நிலையில் இந்தியா தொடர்ந்து நடுநிலைமையை கடைப்பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ. நா சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தின் மீது இன்னும் சில நாட்களில் ஓட்டெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் படி இந்தியாவை உக்ரைன் தற்போது வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் ஒத்துழைப்பு தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று உக்ரையின் அதிபர் அலுவலக தலைவர் தற்பொழுது இந்தியாவின் உதவியை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.