கோவை நாடார் சங்க தேர்தலில் ஆர்.பாஸ்கரன் அணி வெற்றி..!

கோவை நாடார் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது .அதன்படி 20 23- 20 26 ஆண்டுக்கானதேர்தல் நேற்று நடந்தது .இதில் சூலூர் டி.ஆர். சந்திரசேகரன் தலைமையில் 51 பேர் ஒரு அணியிலும்,ஆர் .பாஸ்கரன் தலைமையில் 51 பேர் மற்றொரு அணியிலும் போட்டியிட்டனர் .கோவை டாடாபாத் அழகப்பா ரோட்டில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குளத்தில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை..வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்களிக்கும் முன் அவர்களுடைய விரலில் அழியாத மை வைக்கப்பட்டது .மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது .மொத்தம் 22,200 வாக்குகள் உள்ளன இதில் 10,609வாக்குகள் மட்டுமே பதிவாகின. வாக்குப்பதிவையொட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர்கள் ரவிக்குமார்,பசினா பிபீ, ஆகியோர் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.இரவு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..இன்று அதிகாலை 2 – 15 மணிக்கு அதிகாரபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 10,643 வாக்குகளில் ஆர்.பாஸ்கரன் 5.592 வாக்குகளும்,சூலூர் டி .ஆர் சந்திரசேகரன் 5,052வாக்குகளும் பெற்றனர். 541ஓட்டுக்கள் வித்தியாசத்தில் .ஆர். பாஸ்கரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வெற்றி பெற்ற பாஸ்கரனுக்கு,அவரது அணி நிர்வாகிகளும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சால்வைகளும், மாலைகளும் அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.வெற்றி பெற்ற பாஸ்கரன் இன்று கோவையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.