கோவை தெற்கு உக்கடம், பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி .இவரது மனைவி செண்பகவல்லி ( வயது 60)இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாய் அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற அஜித் குமார் (வயது 26) என்பவரை பார்த்ததும் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் செண்பகவல்லியை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கினார் .இது குறித்து செண்பகவல்லி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து தெற்கு உக்கடம் பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்று அஜித்குமார் ( வயது 26) என்பவரை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல் உட்பட 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாய் குரைத்ததால் ஆத்திரம்.. பெண் மீது தாக்குதல்- வாலிபர் கைது..!
