பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை 7.45 மணிக்கு தொடங்கியது
இதில் 60 அடி நீளமுள்ள குண்டத்துக்கு கோவில் பூசாரி பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தில் முதலில் பூ பந்தை முதலில் உருட்டி விட்டார் இதைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள் ஒருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்க தொடங்கினர் இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் தாயே பராசக்தி என்ற கோஷம்த்துடன் தொடர்ந்து குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் குண்டத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் குண்டத்தில் இறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களும் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.