பொள்ளாச்சி வார மாட்டுச்சந்தை தமிழகத்தில் மிகவும் பழமையான மாட்டுச்சந்தையாகும், பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து வாரம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏராளமான மாடுகள், ஆடுகள் என விற்பனைக்கு வருகின்றன. அண்டை மாநிலம் கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள். தற்போது கேரளாவில் அடித்தட்டு மக்களுக்கு கேரளா அரசு மானியத்துடன் கூடிய கன்று குட்டிகள் தருகின்றனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனவும் ஆந்திராவில் இருந்து மாடுகளை சந்தையில் வாங்கி பொள்ளாச்சி சந்தையில் விற்பனைக்கு வரும் பொழுது போலீசார் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள்,கால்நடை பராமரிப்புத்துறை ஸ்பெஷல் டீம் மற்றும் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்தி சந்தைக்கு கொண்டு வரும் பொழுது லாரி வாடகை, செலவுத்தொகை மட்டும் ரூ ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகிறது எனவும் மத்திய மாநில அரசுகள் சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்..