ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு மகிழ்ந்தன.
சம்பா மாவட்டத்தில் பல இடங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையில் ஈடுபட்டன. ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். குளிர்காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த காலத்தை வரவேற்பதாக ஹோலி பண்டிகை அமைகிறது.
இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையில், முதல் நாளான நேற்று chotti holi பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக ஹோலிகா தகன் என்ற நிகழ்ச்சி நடந்தது. புஜை பொருட்கள், கட்டைகளை கொண்டு தீமூட்டும் இந்த நிகழ்ச்சி பெரும்பாலான வடமாநிலங்களில் நடத்தப்பட்டது. இதில் மக்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகளை செய்தனர். டெல்லியில் மேளதாளம் முழங்க மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். புலம்பெயர்ந்த இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளிலும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.