கோவையில் கடந்த மாதம் அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ரவுடிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக 56 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்று ” பிரகா சகோதரர்கள்” என்ற பெயரில் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் இளைஞர்கள் பொம்மை துப்பாக்கி கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்பது போன்ற வீடியோவை வெளியிட்டனர்.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்த்து வினோதினி என்கிற தமன்னா (வயது 22) கோவை காளப்பட்டியில் பிரண்ட்ஸ் கால் மீது தமன்னா என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளார் .அதில் அவர் பயங்கர ஆயுதங்களுடன் நிற்பது போன்று புகைப்படங்கள் வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார் .அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள் .
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது :-சமூக வலைதளத்தில் மோதல்களை தூண்டுவது போன்ற புகைப்படங்களோ, வீடியோக்களோ மற்றும் தகவல்களோ பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளம்பெண் வினோதினி இது தொடர்பாக 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார் .மேலும் அவர் வசதி படைத்த இளைஞர்களிடம் பேசி அவர்களை ஒரு இடத்துக்கு வரவழைத்து தனது ஆண் நண்பர்கள் மூலம் அந்த இளைஞர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அத்துடன் இதுபோன்று வீடியோக்களையும் வெளியிட்டு 2 குழுக்களுக்கு இடையே பகையை வளர்க்க முயற்சி செய்து உள்ளார். எனவே அவரை தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார். சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வினோதினி கடந்த 20 21 ஆம் ஆண்டு தனது ஆண் நண்பருடன் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர். அவர் நர்சிங் படித்துள்ளார். தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.