கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.நல்லி கவுண்டன்பாளையம், பி.ஏ.பி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் நேற்று அழுகிய நிலையில் ஒரு பெண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து தேவம்பாடி வலசு கிராம நிர்வாக அதிகாரி சிவப்பிரகாஷ் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார்.போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..