ரயில் பயணங்களின் போது கடைசி பெட்டியில் X எனும் எழுத்தை நம்மில் பலரும் கவனித்திருப்போம். எனினும், இதற்கு என்ன காரணம் என்பதை பலரும் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.
ரயிலின் கடைசி பெட்டியில் உள்ள X-க்கு என்ன அர்த்தம் என்பதை ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் தெளிவாக விளக்கி இருக்கிறது. ரயில்வேயின் இந்த விளக்கம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வாய்ப்புகளும் அதிகம்.
உங்களுக்கு தெரியுமா? ரயில் பெட்டியின் கடைசி கோச்-இல் உள்ள ‘X’ எனும் எழுத்து, ரயில் தனக்கு பின் எந்த கோச்களும் இல்லாமல் கடந்து விட்டதை குறிக்கும்,” என ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்திருக்கிறது. இதோடு மஞ்சள் நிறத்தில் X இடம்பெற்று இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
ஆதாவது எந்த ரயில் பெட்டியும் மிஸ் ஆகவில்லை என்பதை இந்த X காட்டுகிறது.
இதற்கு The X Factor என்ற தலைப்பு ஒன்றையும் வழங்கியுள்ளனர். அதில், “‘X’ எனும் எழுத்து ரயிலியின் கடைசி கோச் என்பதை குறிக்கும். ரயில் தனக்கு பின் வேறு எந்த கோச்களையும் விட்டுச் செல்லவில்லை என்பதை ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்வர்.” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த பதிவு சமீபத்தில் இணையத்தில் டிரெண்டானது. ட்வீட் செய்ததில் இருந்து இந்த பதிவை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக வியூக்களை பெற்று இருக்கிறது. மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இந்த பதிவை சுமார் 4 ஆயிரத்து 100-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதுபற்றிய வீடியோவுக்கு பலர் கமெண்ட் செய்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“இது போன்ற எச்சரிக்கை பயனுள்ளதாக இருக்கும் என்ற போதிலும், கோச்-ஐ தனித்து விடும் சம்பவங்கள் பொதுவானதா என்ற கேள்வியும் எழுகிறது,” என டுவிட்டரில் ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொருவர், “அருமை, நான் இதற்கான முக்கியத்துவத்தை கண்டு வியந்திருக்கிறேன்,” என பதிவிட்டுள்ளார். “அருமையான தகவல், இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிருங்கள்,” என்று இன்னொருத்தர் கமெண்ட் செய்திருக்கிறார்.
இந்திய ரியல்வே துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ரயிலின் ரியல் டைம் இருப்பிடத்தை தெரிந்துக்கொள்ளும் வகையில் இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைகோள் புகைப்பட தொழில்நுட்பத்தை கொண்டு அளிக்கப்பட உள்ளது. இப்புதிய திட்டம் கூட்டணி முறையில் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.