வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை படமெடுத்து சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புற்றின் முன்பு மாரியம்மன் சிலை வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த ஒரு நாகம் அம்மன் காலடியில் படமெடுத்து நின்றுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த பக்தர்கள் அவர்களது செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்..