இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.. மளிகை பொருட்கள் தொடங்கி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன..
அந்த வகையில் மருந்துகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த சூழலில், பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி மருந்துகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமேசான் மற்றும் பிளிப்கார் ஹெல்த் பிளஸ் உள்ளிட்ட 20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது..
எந்தவொரு மருந்தின் விற்பனை அல்லது இருப்பு அல்லது காட்சிப்படுத்தல் அல்லது விற்பனை அல்லது விநியோகம் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட மாநில உரிமம் வழங்கும் அதிகாரத்தின் உரிமம் தேவை என்று குறிப்பிட்டிருந்தது. உரிமம் இல்லாமல் ஆன்லைன், இணையம் அல்லது பிற மின்னணு தளங்கள் மூலம் மருந்துகளின் விற்பனை அல்லது இருப்பு அல்லது கண்காட்சி அல்லது விற்பனை அல்லது விநியோகத்திற்கான சலுகை ஆகியவை மருந்துகளின் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த இ-ஃபார்மசிகளை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சில ஆன்லைன் மருந்தகங்கள் மற்றும் தளங்களில் சில்லறை விற்பனைக்கு அனுமதிக்கப்படாத மருந்துகளை பதிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களிடம் இருந்து முறையான பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் மசோதா, 2022-ன் படி, ஆன்லைன் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால், ஆன்லைன் மருந்தகங்களும் உரிமம் இல்லாமல் மருத்துவ சாதனங்களை விற்க அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்..
முன்னதாக, அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்து வணிகர்கள் அமைப்பு ஆன்லைன் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை நடத்தப்போவதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.