கோவை அருகே உள்ள சூலூரில் படகு துறை உள்ளது.இங்குள்ள பூங்கா மற்றும் படகு துறைக்கு ஏராளமான காதல் ஜோடிகள் தினமும் செல்வார்கள். இவர்களை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் இவர்களை பிடிக்க அந்த பகுதியில் மறைவாக நின்று கண்காணித்தனர்.அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் மறைந்து இருந்த 6 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் போலீசார் என்று கூறி படகு துறைக்கு வரும் காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்று தெரியவந்தது இதையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பல்லடத்தைச் சேர்ந்த மணிகண்டன்( வயது 34) கலங்கலை சேர்ந்த சரண் ( வயது 23) சூலூரைச் சேர்ந்த உதய சதீஷ்குமார் (வயது 24) மனோஜ் (வயது 29 )பழனி முருகன் ( வயது 29) சவுந்திர பாண்டியன் (வயது30 )என்பது தெரியவந்தது.இவர்கள் காதல் ஜோடிகளை விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்று பணம் பறித்து சில்மிஷம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து அரிவாள், பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன..