கோவையில் 17 வயது இளைஞரை கடத்தி வந்து திருநங்கையாக மாற்றும் கும்பல், இளைஞரிடமிருந்து ஒன்றைப் பவுன் நகையை பறித்ததால் வாட்ஸ் அப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த இளைஞர், உடனடியாக இளைஞரை மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுடனும் அவர் வாட்ஸ் அப்பில் தொடர்பு வைத்துள்ள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வாட்ஸப்பில் தொடர்பு கொண்ட பள்ளபாளையத்தைச் சேர்ந்த கும்பல் கோவைக்கு கிளம்பி வருமாறு இளம் வாலிபரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளது. அந்த கும்பல் கூறிய வார்த்தையை உண்மை என நம்பி இளம் வாலிபர் நெல்லையில் இருந்து கிளம்பி கோவை வந்துள்ளார். அவர் கோவை வந்து இறங்கியவுடன் அவரை ஒரு நபர் வந்து அழைத்துக் கொண்டு பள்ளபாளையம் பகுதியில் உள்ள ஒரு கும்பலிடம் ஒப்படைத்துவிட்டு 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நட்பை நம்பி வந்த இளைஞரை இந்த கும்பல் ஆடைகளை களைந்து பெண்கள் அணியும் உள்ளாடைகளை கொடுத்து தலை முடியை அலங்கரித்து பெண்கள் அணியும் செறுப்பையும் கொடுத்து அவரை இளம் பெண்போல மேக்கப் செய்து மாற்றியுள்ளனர். மேலும் ஒரு வாரமாக அவரை இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தி ஆண்களிடம் கட்டாய வன்புணர்வு செயல்களில் ஈடுபடுத்தி கொடுமை செய்துள்ளனர். இதனால் உடல்நிலை பாதிப்படைந்த அந்த இளம் வாலிபர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை பிடுங்கி வைத்துக் கொண்ட பள்ளபாளையம் கும்பல் அவரது செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டு தர மறுத்து விட்டது .அதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அந்த இளைஞர் தனது தந்தைக்கு அருகில் இருந்தவர்கள் செல்போன் மூலமாக வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறி வாய்ஸ் மெசேஜ் மற்றும் லொக்கேசன் அனுப்பி உள்ளார். அதன் பேரில் சூலூர் வந்த இளைஞரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட அந்த கும்பலை தேடி சென்றுள்ளனர். அப்போது அது போன்ற ஒரு இளைஞர் தங்களிடம் இல்லை அவனைப் பார்த்ததே இல்லை எனக்கூறி அந்த கும்பல் திருப்பி அனுப்பி விட்டது. அதனை தொடர்ந்து அவனது குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். உடனடியாக அந்த கும்பலை காவல் நிலையம் அழைத்து விசாரித்த போது உண்மையை ஒத்துக் கொண்டனர்.பின்னர் அவர்கள் அந்த இளம் இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்தனர் அந்த இளம் இளைஞருக்கு பெண்கள் அணியும் ஆடைகளையும் , உள்ளாடைகளை அணிவித்து அழைத்து வந்தனர். பின்னர் இளைஞரை பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். மேலும் அவனிடமிருந்து பறித்த இரண்டு பவுன் தங்க நகையை 20 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அந்த நகையை அந்த கும்பல் திருப்பி கொடுத்தது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.