ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஈரோடு துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அறிவுரையின் பேரில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கொத்துகாடு துணை சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். முகாமில் கண் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் 85 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 17 பேருக்கு கண்புரை கண்டறியப்பட்டதால் அவர்களை கண் அறுவை சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், கண் மருத்துவர் உதவியாளர் கோவிந்தராஜன், சுகாதார ஆய்வாளர் சாந்தி, அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் வக்கீல் செந்தில்நாதன், பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி துரைசாமி, கட்சி நிர்வாகிகள் கந்தசாமி, மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..!
