குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்-கோவை நீதிமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கோரிய வழக்கறிஞர்கள்.!

கோவை நீதிமன்ற வளாகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசினார். நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து வழக்கறிஞர்கள் கூறும்போது:-

கோவை நீதிமன்றத்திற்கு ஆறு வழிகள் உள்ளன. தினசரி வழக்கறிஞர் மட்டுமே 1500 க்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள். கடந்த மாதம் நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். உடனே 6 வழிகளிலும் காவல்துறை பாதுகாப்பு நிறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் நீதிமன்றம் வரும் யாரையும் சோதனை செய்வதில்லை எனவே இனியாவது நீதிமன்றத்திற்கு வருபவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வழக்கறிஞர்களை தவிர நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் சோதனை உட்படுத்தி அதன் பிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும். கைதிகளை காவல் துறை நீதிமன்றம் அழைத்து வந்து அதற்கு காவல் நீடிப்பு வழங்கும் நடைமுறை உள்ளது. இதனால் கைதிகள் மற்றும் அவர்களை பார்க்க உறவினர்கள் வருவதால் பாதுகாப்பு குளறுபடி ஏற்படுகிறது. எனவே நீதிமன்றத்திற்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். கூட்டத்தை தவிர்க்க காணொளி காட்சி மூலம் கைதிகளை ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற காவலை நீடிப்பு செய்யலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.