ஜி20 செயற்குழு ஆலோசனை கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 பிரதான நாடுகள் கொண்ட ஜி20 மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை ஏற்று நடத்தி வருகிறது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது .
அதே போல, தற்போது சென்னையிலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை துவங்குகிறது .
2 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் 20 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் . இதில் விலைவாசி உயர்வு, ஆற்றல் பொருட்கள் பற்றாக்குறை, பருவ நிலை மாற்றம் மூலம் வர கூடிய பொருளாதார தாக்கம் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .