இதனால் ஏற்கனவே லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் இது வங்கித் துறையில் நெருக்கடியான நிலையானது நிலவி வரும் நிலையில், இது மேற்கொண்டு பணி நீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவினை சேர்ந்த பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான வால்மார்ட், அதன் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இது குறித்தான செய்தியறிக்கையில் அமெரிக்காவின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் அதன் நூற்றுக்கணக்கான ஊழியர்களை அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் இருந்து குறைத்துள்ளதாகவும், அவர்களுக்கு புதிய வேலையினை தேடிக் கொள்ள 90 நாள் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு காரணங்களுக்காக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. குறிப்பாக சில நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கை, மறுசீரமைமைப்பு, இணைப்பும், புதியதாக சேர்த்தல் நிறுவனங்கள், வணிக யுக்தி, லாபம் சரிந்து வருவதால் எடுத்து வரப்படும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
இது வால்மார்ட்டில் இந்த நடவடிக்கையானது அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இருப்பதாகவும், இது ஒரு கடினமான அனுபவமாக இருப்பதாகவும், இதனால் ஊழியர்கள் நிதி ரீதியாக கடினமான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் எனவும் கூறியுள்ளது. எனினும் நிறுவனங்களில் கடினமான சூழலில் இருந்து வரும் நிலையில், பல சவால்களுக்கு மத்தியில் இதுபோன்ற நடவடிக்கைகள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் வால்மார்ட்டி இந்த நடவடிக்கையானது அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இதன் மூலம் பாதிக்கப்பட்டது அமெரிக்க ஊழியர்கள் மட்டும் தானா? அல்லது மற்ற நாடுகளை சார்ந்த ஊழியர்களுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் கிட்டதட்ட 1.74 மில்லியன் ஊழியர்கள் உள்ள நிலையில், அமெரிக்காவில் மடும் 5000 கடைகளை வால்மார்ட் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இன்றும் வேலை வாய்ப்பினை மிகப்பெரிய அளவில் வழங்கி வரும் நிறுவனம் வால்மார்ட் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக வால்மார்ட் தொடர்ந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது செலவு குறைப்பு நடவடிக்கையாக இந்த பணி நீக்கத்தினையும் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.