கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக 3 இடங்களில் ஆவின் பாலகங்களை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
அதன்படி கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பு ஆகிய மூன்று இடங்களில் தனித்தனியாக உயர்தர ஆவின் பாலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு பால், நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 45 வகையான பால் பொருள்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த திறப்பு விழாவில் கோவை மாநகர ஆயுதப்படை துணை காவல் ஆணையர் முரளிதரன், கோவை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி, ஆயுதப்படைக் காவல் உதவி ஆணையர் சேகர், கோவை ஆவின் நிறுவன பொது மேலாளர் ராமநாதன் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..