வேளாண் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் அரசு திட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் காவேரி டெல்டா வேளாண் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு விவசாய சங்கங்கள் மட்டுமின்றி பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலக்கரி சுரங்க அமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களின் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார். அதில், மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் விடப்பட்டு இருக்காது.
ஆனால்,தமிழக தொழித்துறை அமைச்சர் எங்களுக்கு தெரியாது என கூறுகிறார். என விமர்சனம் செய்தார்.
அடுத்ததாக, காவிரி டெல்டாவை அளிக்க சூழ்ச்சி நடைபெறுகிறது. மத்திய அரசு டெண்டர் விடும் நடவடிக்கை வரை சென்றுவிட்டது.
ஆனால் தமிழக அரசு இன்னும் அமைதியாக இருக்கிறது. முதல்வர் இன்னும் அமைதியாக இருக்கிறார் என குற்றம் சாட்டினார்.
அடுத்ததாக, தமிழகத்தில் 6 புதிய சுரங்களுக்கு அனுமதி தரமாட்டோம் என மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது தமிழகத்தின் பிரச்சனை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் , நெய்வேலி என்எல்சி நிறுவனமானது 66 ஆண்டு காலமாக தண்ணீரையும், சுற்றுசூழலையும் நாசப்படுத்தி கொண்டு இருக்கிறது. அதுகுறித்து சென்னை ஐஐடி நிறுவனம் 3 மாத காலத்தில் ஆய்வு செய்து, ஒட்டு மொத்த பாதிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார் .
என்எல்சி மூலமாக தமிழகத்திற்கு 800 மெகா வாட் மாசுபட்ட மின்சாரம் மட்டுமே இருக்கிறது. மின் உற்பத்தியானது 2022 டிசம்பர் மாதம் வரையில் 35 ஆயிரம் மெகா வாட் ஆகும்.தமிழக்தின் தேவை என்பது 18 ஆயிரம் மெகா வாட் மட்டுமே. தமிழகத்தில் ஏற்கனவே 2 மடங்கு மின்சாரம் தாயார் ஆகிறது. ஆகவே கூடுதல் நிலக்கரி சுரங்கம் என்பது தேவையில்லை என்றும், என்எல்சி தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் பாமக தலைவர் அம்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.