பொள்ளாச்சி மாவட்டம் வடகரை ஆத்துரைச் சார்ந்த லியாகத் அலி என்பவர் மார்ச் 15 ஆம் அன்று இரவு பணியில் இருந்த போது கட்டி விரியன் பாம்பு அவரை முதுகில் கடித்தது. உடனடியாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . அந்த சிகிச்சை அவருக்கு பலன் அளிக்கவில்லை பின்பு அவரை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்து இரண்டு நாள் கழித்து லியாகாத் அலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில் கோயம்புத்தூர் வேறு இரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உடலின் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை . இதற்கிடையில் அவரது உடல்நிலை இன்னும் மோசம் அடைந்து லியாகத் அலி கோமாவுக்கு சென்று விட்டதாகவும் அவர் மூளை சிதைவு அடைந்து விட்டதாகவும் அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . உடனே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் லியாகத் அலியை உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டபடியே அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார் . லியாகத் அலி தன் இறுதி நிமிடங்களுக்காக போராடிக் கொண்டிருந்தார் . அப்பொழுது லியாகத் அலியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது கண்ட அவரது தாயார் உடனடியாக உறவினர்களை அழைத்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு மணியம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மணியன் மருத்துவ குழுவினர் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சையை மேற்கொண்டனர் . இரண்டு நாட்கள் கழித்து லியாகத் அலி தலையின் உடல்நிலை முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன நான்கு நாட்கள் கழித்து லியாகத் அலி கண் திறந்து பார்த்தார். இதை தொடர்ந்து செயற்கை கருவியில் இருந்து விடுபட்டு தானாக பேசத் தொடங்கினார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைப் பற்றிய மணியன் மருத்துவர் டாக்டர் சு செந்தில் குமார் அவர்களிடம் மூளைச் சாவு அடைந்தவர் மீண்டும் பிழைக்க முடியுமா என்று கேள்வி எழும்பியது அதற்கு டாக்டர் சு செந்தில்குமார் அவர்கள் மூளை சாவு அடைந்தவர் மீண்டும் பிழைக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு தான் இவருக்கு ஏற்பட்டது பாம்பின் விஷத்தினால் ஏற்பட்ட மூளை செயலிழப்பு தான் என்றார் . மேலும் பருவ நிலை மாற்றங்களினால் பாம்பின் விஷத்தன்மையில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகிறது என்று விளக்கம் அளித்தார் . தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து லியாகத் அலி கடந்த (02/04/2023) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார் . இதனால் ஈரோடு பொதுமக்கள் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வெகுவாக பாராட்டினார்கள்..