கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று 20 க்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவையை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிதி நிறுவனம் கோவை. சூலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பலரிடம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்தது. ஆனால் பணம் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியும் கொடுக்கவில்லை. அசலையும் திருப்பிக் கொடுக்கவில்லை.மொத்தம் ரூ 97 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது .இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வேதனையில் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். ஆனால் எங்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.