அண்ணாமலை வெளியிடப் போகும் அமைச்சரவை ஊழல் பட்டியலில் உள்ள முக்கிய புள்ளிகளின் பெயர்கள் கசிந்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் எனவும், சொத்து பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும் எனவும் கூறினார். பாஜகவின் இணையதளத்தில் அனைத்து ஆதாரங்களும் வெளியிடப்படும் என்றும் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த பட்டியலில் துபாயில் வணிகம், அயல்நாடுகளில் குவித்துவைத்த சொத்து, மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் கட்டாயம் இடம்பெறும் அவற்றின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் தெரிவித்தார் அண்ணாமலை.
இப்படி அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தரப்பில் யார் யார் பெயர் அந்த பட்டியலில் இருக்குமோ என்பது போன்ற கடும் விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலில் அவர் பெயர் இருக்குமோ? இவர் பெயர் இருக்குமோ? அவர் இருப்பாரோ? இவர் இருப்பாரோ? இவர்தான் நிறைய சொத்து சேர்த்துள்ளார்! அவர் தான் நிறைய சொத்து சேர்த்துள்ளார்! என்பது போன்ற விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அண்ணாமலை பேசும் பொழுது கூறியதாவது ஏப்ரல் 14ஆம் தேதி என முதலிலேயே சொல்லிவிட்டேன். அதில் என்ன உங்களுக்கு பிரச்சனை? நான் கண்டிப்பாக பட்டியலை போட போகிறேன் அதற்குள் என்ன அவசரமாக கேட்டேன்? என பத்திரிகையாளர்கள் மத்தியில் கேட்டதும் சலலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட போகும் பட்டியலில் என்னென்ன அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள சில வட்டாரத்தில் விசாரித்த பொழுது சில முக்கிய அமைச்சர்களின் பெயர்களை இலைமறைவு காயாக வெளியில் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமான நிர்வாகி ஒருவர், அண்ணாமலைக்கும் அமைச்சருக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறதா அந்த அமைச்சர் தொடர்பான ஊழல் புகாரை தான் பிரதானப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் அண்ணாமலை.
அதேபோல் சமீபத்தில் தமிழ்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருளை விநியோகம் செய்யும் முக்கியத்துறை சார்ந்த ஒரு சில ஆவணங்கள் குறித்தும் தகவல் வெளியிடப் போகிறாராம். அது மட்டும் இல்லாமல் ஜோதி மாவட்ட அமைச்சர் தொடர்பாகவும் சில ஆவணங்களையும் இலாக்கா மாற்றம் சர்ச்சை குறித்த ஆவணங்களையும் அண்ணாமலை வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தின் மோஸ்ட் சீனியர் அமைச்சரின் நிர்வகித்துறை தொடர்பாகவும், இனிப்பு பெயரைக் கொண்ட அமைச்சர் துணைக் குறித்த சில ஆவணங்களையும் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் பெண் அமைச்சரின் ஒருவர் துறையில் நடந்த குளறுபடிகள் குறித்த ஆவணங்கள் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில அமைச்சர்களின் சொத்து பட்டியல் முதலீடுகள் குறித்தும் ஆவணங்கள் வெளியிடப் போகிறாராம் அண்ணாமலை! இந்த பட்டியல் முதற்கட்டமானது தான் எனவும் இனிவரும் காலங்களில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்புது பட்டியல் வெளியிடப்படும் என்றும் அழுத்தம் திருத்தமாக சில நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இதுவரை அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளாகவே இருந்திருக்கின்றன, தற்பொழுது முறையான ஆவணங்களுடன் முறைகேடுகள் குறித்த தகவல் வரும் என முக்கிய இடத்திலிருந்து செய்தி வந்துள்ளது.
இன்னும் 10 நாட்கள் இருக்கையில் இப்பொழுதே எதிர்பார்ப்புகள் மற்றும் படபடப்புகள் ஆரம்பமாக துவங்கிவிட்டன.