வீட்டின் பூட்டை உடைத்து 2 .80 லட்சம், 21 சவரன் நகை கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!

ஈரோடு மாவட்டம்  கோபி பாரதி வீதியில் வீட்டின் படுக்கையறையில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மற்றும் 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு சொந்தமான வீடு கோபி பாரதி வீதியில் உள்ளது. கோபி வடக்கு பார்க் வீதியை சேர்ந்த முரளிராம் மகன் சுதர்சன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சுதர்சன், சுகந்தியின் வீட்டை 2 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு  விலை பேசி 15 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். மீதுமுள்ள தொகையை கொடுப்பதற்காகவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் 2 கோடியே 80 லட்சம் ரூபாயையும், 21 சவரன் நகையையும் புதியதாக வாங்க இருக்கும் பாரதி வீதியில் உள்ள வீட்டில் தனி அறையில் வைத்து இருந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் சுதர்சன், அவரது வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் வந்து பார்த்த போது முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார் அதைத் தொடர்ந்து உள்ளே சென்ற போது, வீட்டின் படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே 4 பேக்குகளில் வைத்து இருந்த 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மற்றும் 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சுதர்சன் அளித்த தகவலின் பேரில் கோபி போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கோடியே 80 லட்சம்  ரூபாய் மற்றும் 21 சவரன் நகை  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  கோபியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.