மாணவர்கள் விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா… மே 30ம் தேதி முதல் அமல்..!

வாஷிங்டன் : சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். அதிலும் இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பயில அமெரிக்கா செல்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா அரசு மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை 25 டாலர் உயர்த்தியுள்ளது.

இதுவரை மாணவர்களுக்கான விசா கட்டணம் 160 டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,800 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 185 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற செலவுகளையும் சேர்த்து இந்திய மாணவர்கள் ரூ.15,140 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஒப்பந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்களுக்கான விசா கட்டணம் 110 டாலர் அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் 30ம் தேதி அமலுக்கு வருகிறது.