பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும், குறிப்பாக இந்தியாவின் இளைஞர்களை எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இது நமது இளைஞர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தி, அங்கு வசிப்பவர்களின் விருந்தோம்பலை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் என்று மோடி கூறியுள்ளார்.
எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர்கள் கிபித்தூ & ட்யூட்டிங் கிராமங்களுக்குச் சென்று வருவதாக அமிர்தப் பெருவிழாவின் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம் இளைஞர்களுக்கு இந்த வடகிழக்கு பிராந்தியத்தின் வாழ்க்கை முறை, பழங்குடியினர், நாட்டுப்புற இசை மற்றும் கைவினைப்பொருட்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அதன் உள்ளூர் சுவைகள் மற்றும் இயற்கை அழகில் மூழ்கவும் வாய்ப்பளிக்கிறது.
அமிர்தப் பெருவிழாவின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்க வேண்டும். மற்றவர்களை, குறிப்பாக இந்திய இளைஞர்களை எல்லைக் கிராமங்களுக்குச் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது நமது இளைஞர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை பற்றி தெரிந்துகொள்ளவும், அங்கு வசிப்பவர்களின் விருந்தோம்பலை அனுபவிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.