ஐ.டி. ஊழியரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ 15.75 லட்சம் மீட்பு – சைபர் கிரைம் போலீசார் அதிரடி..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்பக்கம் உள்ள சிக்கத் தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானமணி ( வயது 38) ஐ. டி ஊழியரான இவர் கொரோனா தொற்று காலத்தின் போது ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பல்வேறு கட்டங்களாக அவர் அந்த செயலி மூலம் ரூ.15, லட்சத்து 73 ஆயிரத்து 395 முதலீடு செய்து உள்ளார்.இந்த நிலையில் அவரது முதலீட்டுக்கு இதுவரை ரூ. 61 லட்சத்து 5 ஆயிரம் லாபம் கிடைத்துள்ளதாக அந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து லாப பணத்தை தனது வங்கி கணக்கிற்க்கு மாற்ற முயன்றார். ஆனால் அவர் பல்வேறு வகைகளில் முயற்சி செய்தும் அந்த லாப பணத்தை அவரது வங்கி கணக்கில் மாற்ற முடியவில்லை .இதனால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த அவர் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரிலபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த செயலி போலி என்பதும், அவரது பணம் ரூ.15, லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம்போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கை முடக்கி அதிலிருந்து 15 லட்சத்தி 75 ஆயிரத்தை மீட்டுஐ .டி. ஊழியர் ஞானமணியிடம் ஒப்படைத்தனர்..