சீனா செல்லும் ஒரு லட்சம் இலங்கை குரங்குகள்..!

சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக இலங்கை வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பண நெருக்கடியில் உள்ள இலங்கை சீனாவிற்கு ஒரு லட்சம் டாக் மக்காக் என்ற குரங்கு வகைகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக நாட்டின் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்படும் குரங்கு ஒன்றிற்கு சீனா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவை உயிரியல் பூங்காக்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளன எனவும் கூறினார்.