தொழில் நஷ்டம்… கோவை வியாபாரி தூக்குப் போட்டு தற்கொலை..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி, ஆர்.எம்.கார்டனை சேர்ந்தவர் அருண் பாரத் ( வயது 24)டிரேடிங் வியாபாரம் செய்து வந்தார் .தொழிலில் இவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அருண் பாரத் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் . மேலும் விசாரணை நடந்து வருகிறது.