சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் 10 நிமிடங்கள் ஒளிப்பதிவு செய்து, ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் (Sign Language Interpreters) மூலமாக இது செயல்படுத்தப்படவுள்ளது.