கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி கொலையும்,நீதிமன்றம் அருகே நடந்த ரவுடி கொலையும் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இது தொடர்பாக ரவுடிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு,ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து போலீசார் 3 ரவுடிகளை தேடி வருகிறார்கள்.இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே நேற்று நள்ளிரவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.இதில் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முத்து மனோகர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.. இந்த கொலை வழக்கில் கைதான நெல்லை மாவட்டம் , மானூரை சேர்ந்த மாடசாமி ( வயது 23) அவரது அண்ணன் சுபாஷ் ( வயது 25) பசும்பொன் ( வயது 27 )என்பது தெரிய வந்தது.இவர்கள் 3 பேரும் சமீபத்தில் தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.இவர்கள் எதற்காக கோவைக்கு வந்தார்கள்? என்பது தெரியவில்லை. ஏதாவது ரவுடியை கொலை செய்ய கூலிப்படையாக வந்தார்களா?அல்லது வேறு எந்த நோக்கத்துடன் இங்கு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..