துபாயில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கள்ளக்குறிச்சி வந்தது- அமைச்சர் மஸ்தான் அஞ்சலி..!

ங்கராபுரம் : துபாயில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டன. அமைச்சர் மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராமராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முகமது ரபிக், 49; இமாம் காசிம், 43; துபாயில் வேலை செய்தனர்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவரும் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் முலம் ராமராஜாபுரம் கிராமத்திற்கு, நேற்று மதியம் 1:00 மணியளவில் கொண்டு வரப்பட்டது.வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இறந்தவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார்.உதயசூரியன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., மோகன்ராஜ், ஆவின் சேர்மன் ஆறுமுகம், ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்..