ஆளுநர் பதவியில் எப்பொழுது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்பொழுது பதவி விலகி விடுவேன் என ஆளுநர் ரவி பேச்சு..!!
தமிழக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் சென்றடைந்துள்ளார். அங்கே மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்து ஆடினார். அப்பொழுது பேசிய அவர் மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிப்பதை தவிர்த்து விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நம் நாட்டில் விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்த யோகாசனம் செய்யுங்கள் என தெரிவித்த அவர் தான்மதி வகிக்கும் பதவியில் எப்பொழுது சலிப்பு ஏற்படுகிறதோ அப்பொழுது நான் வேலையில் இருந்து விலகிடுவேன் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற ஆளுநர் ரவிக்கு எதிராக விசிக, மதிமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். நாளை தமிழக ஆளுநர் ரவி இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.