புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர் கணேசன் டிரைவர். இவருடைய மனைவி நிவேதா இவர்கள் இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நிவேதா இன்னொரு வாலிபருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த கணேசன் நிவேதாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அவர் சூலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதான கணேசன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலம் கூறும் போது:-
அவர் அந்தமான் நிக்கோபார் தீவில் பிறந்ததாகவும், பெற்றோரை இழந்த அவரை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசமலையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் தத்தெடுத்து வளர்த்தார். கணேசன் அவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை அன்னூரில் தனியார் மில்லில் வேலை பார்த்தார். அப்பொழுது அங்கு பணியாற்றிய திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த நிவேதா என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அது தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சூலூர் அடுத்து பள்ளபாளையம் பகுதியில் குடியேறினர். அங்கு கட்டிட வேலை மற்றும் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அங்குள்ள மில்லுக்கு நிவேதா வேலைக்கு சென்று வந்தார். அப்பொழுது அங்கு வேலை பார்த்து ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதை அறிந்த நிவேதாவிடம் கள்ளக் காதலை கைவிடுமாறு கூறி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு நிவேதா செல்போன் மூலம் கள்ளக் காதலுடன் பேசி வந்தார். இதனால் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அங்கு இருந்த அவரது மாமியாரிடம் குழந்தைகளுக்கு பழச்சாரு வாங்கி கொடுக்குமாறு கூறி வெளியே அனுப்பினார். அவர் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றதும். அவர் மனைவியிடம் கள்ளக் காதல் விவகாரம் குறித்து பேசினார்கள். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதாவின் கழுத்தை ஐந்து இடங்களில் குத்தி உள்ளார். அதன் பிறகு ஆத்திரம் அடங்காமல் நிவேதாவின் மார்பு, வயிற்று, தொடை, கால் என 27 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதில் நிவேதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதன் பிறகு காவல் துறை விசாரணை நடத்தி அவரை கைது செய்ததாக வாக்குமூலத்தில் போலீசாரிடம் கூறி உள்ளார். கைதான கணேசனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.