கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை பேரூர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த தொழிலாளியான ரதீஷ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். அவர் தனது காதலை அந்த சிறுமியிடம் கூறிய போது அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரதீஷ் அந்த சிறுமி வீட்டுக்கு சென்று அந்த சிறுமையை சந்தித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த சிறுமி அதை மறைத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரதீஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சிறுமியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த சிறுமியின் தந்தையும் அவர் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பேரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமுறைவான ரதீஷ் கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இது தொடர்பாக கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ரதீஷ் நீதிமன்றத்தில் ஆஜரானதால் வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட ரதீஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 21,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து காவல்துறையினர் ரதீஷ்சை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.